கடலூர் அருகே குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்த தொழில் துறை அமைச்சர்

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கபணிகள் சார்பில் கடலூர் இராமாபுரம் ஊராட்சியில் குடிமராமத்துப் பணிகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் மூலம் நீர் மேலாண்மையை பெருக்கவும், நிலத்தடி நீரினை பாதுகாக்கவும் குடிமராமத்து பணியின் கீழ் தமிழகம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடலூர் இராமாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கபணிகள் சார்பில் குடிமராமத்துப் பணிகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பங்கேற்று பணிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பேசிய, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 17 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கி மராமத்துப் பணிகள் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Exit mobile version