மதுரை மாவட்டம் பெருங்குடியில், தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயக்குமார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், மல்லிகை பூவை வீணாக்காமல் மதுரை, திண்டுக்கல், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், இதனால் பத்தாயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக மல்லிகை பூக்கள் விற்பனை செய்யப்படாமல் விவசாயிகள் சிரமப்பட்டதையடுத்து, அரசும் மாவட்ட நிர்வாகமும், இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் வினய், வேளாண் துறை அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.