மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்திற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

சிபிஐக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிபிஐ தனது பணியை மேற்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார். தனது பணியை சிபிஐ செய்தால், அரசியல் பழிவாங்கல் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுவதாகவும் பணியை செய்யவில்லை என்றால் கூண்டு கிளி என விமர்சிப்பதாகவும் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version