அமைச்சர் நிலோபர் கபில் வரிசையில் நின்று வாக்களித்தார்

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 350 பேரும், பெண்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 105 பேரும் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறன. அதன்படி மொத்தம், 3 ஆயிரத்து 752 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபேட் ஆயிரத்து 896 இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 600 துணை ராணுவத்தினர் உட்பட, 6 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் 73வது வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று அமைச்சர் நிலோபர் கபில் வாக்களித்தார். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், திமுகவின் பணப்பட்டுவாடாவால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version