முதல்வர் கரத்தை வலுப்படுத்தி எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தவும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு பாடம் புகட்டவும் அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மத்தியில் நிலையான வளமான ஆட்சி தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தவும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு பாடம் புகட்டவும் அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version