கடலூரில் தொடர் மழை காரணமாக மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தநிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடலூரில் தானம் நகர், வில்வராயநத்தம், கூத்தப்பாக்கம், தங்கராஜ் நகர், உப்பலவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மழை நீர் சூழ்ந்த பகுதிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் ஆகியோர் ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மழை சூழ்ந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு உடனடியாக மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த பணியில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.