நெய்வேலி என்எல்சி நிறுவன விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தொகைக்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த 1-ம் தேதி இரண்டாவது அனல் மின் நிலையத்தில், பாய்லர் வெடித்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தொழிலாளிகளுக்கு அரசு சார்பில் தலா 3 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், சிறிய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனடிப்படையில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணைத் தொகைக்கான காசோலையை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி உட்பட அரசு அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.