சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாரிசு அமைச்சர் உதயநிதியின் வரவேற்பு நிகழ்ச்சியில், விடியா அரசின் சர்ச்சை அமைச்சர் கே.என்.நேரு தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தலைவாசலில் வாரிசு அமைச்சருக்கு, திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்கள் வாரிசு அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திமுக அமைச்சர் கே.என் நேரு, ஆர்வத்துடன் வந்த தொண்டர்களை அடித்து தள்ளிவிடும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்களால் தூக்கத்தை இழந்து தவிப்பதாக ஸ்டாலின் புலம்பிய நாள் முதல், அமைச்சர்களின் அட்ராசிட்டி அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு வேளை தங்களின் அட்ராசிட்டியை ஸ்டாலின் பாராட்டி பேசியதாக நினைத்து, திமுக அமைச்சர்கள் தங்களது அராஜகத்தை பெருக்கிக் கொண்டார்களோ? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.