ஈரோட்டில் 36 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம், பயணிகள் நிழற்குடை, மேல்நிலை குடிநீர் தொட்டிகளை தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் திறந்து வைத்தார். சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர், அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும், பொதுமக்களை சிக்கனமாக குடி நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கருப்பண்ணன் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.