சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வியாழக்கிழமை வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள அமைச்சர் காமராஜ் வியாழக்கிழமை வீடு திரும்புவார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் காமராஜை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருமாத தொடர் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா காலத்தில் உயிரை துச்சமென மதித்து பணியாற்றியவர் என்றும் தெரிவித்தார். அமைச்சர் காமராஜ் இன்னும் 3 வாரங்களில் மக்கள் பணியில் ஈடுபடுவார் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.