Viscom மாணவர்களை வாழ்த்திய அமைச்சர் கடம்பூர் ராஜு..

கோவாவில் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழா கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

உலக நட்சத்திரங்கள் ஒன்றாக கூடும் திரைப்பட விழாவில் சென்னையை சேர்ந்த அவிச்சி கல்லூரியில் படிக்கும் viscom மாணவர்கள் கலந்து கொண்டு master classes,workshops மற்றும் IFFI-ஆல் திரையிடப்படும் படங்களைப் பார்த்து பல அனுபவங்களை பெற உள்ளனர்.மேலும் மாணவர்களோடு அவிச்சி கல்லூரியின் chairman,secretary,correspondent என அனைவரும் சென்று மாணவர்களை வழி நடத்த உள்ளனர்.

இவர்கள் கோவா செல்வதற்கு முன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் வாழ்த்து பெற்றுள்ளனர்.டாக்டர் எம்ஜிஆர் film institute மூலம் உங்களுக்கு தேவைப்படும் உதவியை செய்து தருவோம் என்று வாழ்த்துக் கூறி மாணவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ உற்சாகப்படுத்தி உள்ளார்.

Exit mobile version