மாசி மக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களாக சுப்ரமணிய சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.