தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆவல்நத்தம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், குடிமராமத்து திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறினார்.