நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கோதைசேரி கிராமத்தில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.
கோதைசேரி கிராம மக்கள் அதிமுகவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக அரசின் சாதனை பட்டியலை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பிரசாரத்தின் போது அமைச்சருடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உள்ளாட்சித் தேர்தல் தாமதமாக நடைபெறுவதற்கு திமுகவே காரணமென குற்றம்சாட்டினார்.