ஆயுள் பிரிமியம் இன்சூரன்ஸ் முழு வரி விலக்கு அளித்திட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஆயுள் பிரிமியம் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியிலிருந்து முழு விலக்கு அளித்திட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

38 வது ஜி.எஸ்.டி கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது. இதில்,   மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.  
தமிழகத்திற்கு 2017 – 18 ஆண்டிற்கு வரவேண்டிய  ஜி.எஸ்.டி நிலுவை தொகை மற்றும் இழப்பீட்டு தொகையினை மத்திய அரசு விரைந்து வழங்க அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீது விதிக்கப்பட்டு வரும் 18% வரியிலிருந்து முழுவிலக்கு அளித்திட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வணிகர் பயன்பெற அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இயங்க போதிய  வசதிகள் செய்து தர வலியுறுத்தியுள்ளார்..

வணிக பிரதிநிதிகள், வணிக சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்து வந்த மனுக்கள் படி மேலும் சில பொருட்களுக்கு வரியை குறைக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

Exit mobile version