அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், துணைவேந்தர் சூரப்பாவின் நடவடிக்கை ஒழுங்கீனமானது என்றும், இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு மூலதன மானிய நிதி வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு, 72 குழுக்களுக்கு, ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பிலான மூலதன மானிய நிதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டது ஒழுங்கீன நடவடிக்கை என கூறினார். இதுகுறித்து அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.