முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின்கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு, ஆயிரத்து 912 பயனாளிகளுக்கு, சுமார் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, அம்மா இருசக்கர வாகனம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.