மாநகர காவல் ஆணையரிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் புகார்

தன்னுடைய மகன் மீது தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை மாநகர ஆணையரிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த நவீன் என்ற இளைஞர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டி நீலாங்கரை அருகே விபத்தை ஏற்படுத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை அவர் தரக்குரைவாக பேசி தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி, சமூக வளைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த இளைஞர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மகன் என்று சமூக வளைதளங்கில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை நேரில் சந்தித்து, புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், தனது பெயரையும், தன் மகனின் நற்பெயரையும் கெடுக்கும் வகையில், சமூக வளைதளங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புகாரளித்துள்ளார். மேலும் வதந்தி பரப்புவொரைக் கண்டறிந்து அவர்கள்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version