ஊராட்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம்

 விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 307 பயணிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், காணை, மயிலம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 307 பயனாளிகளுக்கு, 6 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், விழுப்புரம் மாவட்ட ஊராட்சித் துறையில் பணிபுரிந்து, பணியினிடையே காலமான 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டவர்கள், அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது.46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை, பருவமழையின் காரணமாக நீர் மட்டம் உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சம்பா சாகுபடி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்ற, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ஆகியோர் மலர் தூவித் தண்ணீரைத் திறந்து வைத்தனர். அணையின் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version