தமிழ் வழியில் பயின்று தனித்திறமைகளில் சிறந்து விளங்கி தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு காமராஜர் விருது மற்றும் ஊக்கத்தொகையினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் பள்ளிக்கல்வி துறை சார்பில் 2018 – 2019ம் கல்வியாண்டில் 10ஆம் மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் ஊக்கத்தொகை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறந்து விளங்கிய 18 மாணவ மாணவிகளை பாராட்டி காமராஜர் விருது வழங்கினார். தொடர்ந்து 10 வகுப்பு மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் என 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.