விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் திருமண வரவேற்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் புண்ணியமூர்த்தி இல்ல திருமண வரவேற்பு வடவெட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மணமக்கள் சத்தியராஜ் – வினோதினியை வாழ்த்தினார். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற அமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பில் செண்டை மேளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.