திறந்தவெளி கிணறு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைய உள்ள திறந்தவெளி கிணறு அமைக்கும் பணிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார்.

விக்கிரவாண்டி பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அந்த பகுதியின் குடிநீர் பிரச்னையை போக்கும் விதமாகவும் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்தவெளி கிணறு அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

அதன்படி திறந்தவெளி கிணறு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு, கிணறு அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி பேரூராட்சி நிலையத்திற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு இரண்டு பேட்டரி வாகனங்களையும் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version