முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திண்டிவனம் அருகேயுள்ள மரக்காணத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில் வேளாண்மை துறை மூலம் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

Exit mobile version