கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்

சூலூர் தொகுதிக்குட்பட்ட சோமனூர் பகுதியில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, சூலூர் தொகுதிக்குட்பட்ட சோமனூரை அடுத்த செந்துரை பகுதிகளில், சுமார் 2 கிலோ மீட்டர் வரை, வெறும் காலில் வீதி வீதியாக நடந்து சென்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version