செஞ்சி அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. மேல்மலையனூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு தியாகிகளின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தினார். பின்னர், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில், ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு, தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version