விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நகரில் காகுப்பம், மணி நகர், பானாம்பட்டு உள்ளிட்ட 9 பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்ற தொடக்க விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்துக் கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.