மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடுமையான சர்க்கரை நோய் இருந்தது தெரிந்தும், சசிகலா குடும்பத்தினர் அவருக்கு அல்வாவை கொடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவர்கள் பார்த்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.