தருமபுரியில் 31-வது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.
சாலைகளை நல்ல முறையில் செப்பனிட்டு குறுகிய சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக சாலை விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில், விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மலர்விழி உட்பட வட்டாரப் போக்குவரத்து பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்…