அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற சிறப்பு தீபாராதனை – அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டி மலையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டி கரூர் மாவட்டம் கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மலையம்மன் ஆலயத்தில் விஷேச தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி மற்றும் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version