சீனாவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் நாசம்

சீனாவில் வெள்ளப்பெருக்கால் , மா சே துங் சிலையை சுற்றியுள்ள சியாங்யாங் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தெற்கு மற்றும் மத்திய சீனாவின் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவின் நெருக்கடி மேலாண்மை அமைச்சகம் தெரித்ததன்படி இதுவரை 9300 வீடுகள் இடிந்துள்ளன. 3 லட்சத்து 71 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் இதனால் நாசமாகியுள்ளது.

இந்நிலையில், சாங்ஷாவிலுள்ள ஆரஞ்சு தீவில் அமைந்திருக்கும் , சீனத்தலைவர் மா சே துங்கின் சிலையை சுற்றிலும் உள்ள சியான்யாங் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் டிரோன்களில் பதிவாகியுள்ளன..

Exit mobile version