ஸ்காட்லாந்தில் தனித்தீவைச் சொந்தமாக வைத்திருக்கும் கோடீஸ்வரர் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுத் தனது மகள்களுக்கு வித்தியாசமன முறையில் பரிசு வழங்கியுள்ளார்.
Roc Sandford என்பவர் பெரும் கோடீஸ்வரர் ஆவார். இவருக்கு ஸ்காட்லாந்தில் தனித்தீவு சொந்தமாக உள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அந்த நாளுக்கு முன்னரே தனது இரண்டு மகள்களான சவன்னா (Savannah )மற்றும் புளூ (Blue) ஆகியோருடன் கொண்டாட Roc முடிவு செய்தார். இதைத் தனது சொந்தத் தீவிலேயே கொண்டாடினார். மேலும் மகள்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் புதிய முயற்சியை மேற்க்கொண்டார் ராக். தனது இரு மகள்களை அழைத்துப் பரிசு அடங்கிய ஒரு பெட்டியை அவர்களிடம் கொடுத்தார்.
பெரிய பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அது என்ன பரிசாக இருக்கும் என இருவரும் ஆர்வத்துடன் திறந்து பார்த்த போது உள்ளே குப்பைகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் இருந்தன.
இது குறித்து Roc கூறுகையில், என் மகள்கள் நான் கொடுத்த பரிசைப் பிரித்துப் பார்த்து போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சாலையில் நான் எடுத்த குப்பைகள், மணல் ஆகியவற்றைக் கொண்டு கலைப்பொருட்களாக வடிவமைத்தேன். அதில் சில கலைப்பொருட்களை லண்டனில் உள்ள கலைக்கண்காட்சியிலும் வைத்துள்ளேன். கோடீஸ்வர தந்தையிடம் இருந்து இது போன்ற பரிசை என் மகள்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் இது அவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி தான் எனப் புன்னகையுடன் கூறினார்.மிகப்பெரிய கோடீஸ்வர தந்தை இப்படி ஒரு பரிசு கொடுத்திருப்பது, அவரின் இரு மகளுக்கு மட்டுமின்றி சமூக ஆர்வாலர்கள் பலரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.