கமுதியில் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் விவசாயிகள் மாற்று விவசாயத்தை நாடி, சிறு தானிய பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் இல்லாததால் நெல், மிளகாய், மல்லி உள்ளிட்டவைகளில் ஆர்வம் குறைந்து, தற்போது மாற்று விவசாயமாக வறட்சியை தாங்கி விளையக்கூடிய உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை பயிரிட அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறுதானிய பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.