பல ஆண்டுகளாக பால் விற்பனை – தனி ஆளாக சாதித்து வரும் பெண்

பெரியகுளம் அருகே மீனாட்சிபுரத்தில் மாட்டுப் பால் உற்பத்தி செய்து குழந்தைகளுக்கு மட்டுமே பல மைல் தூரம் இரு சக்கர வாகனத்தில் தனியே சென்று விற்பனை செய்து வருகிறார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஏ. மீனாட்சிபுரத்தில் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் தன்னுடைய தாயாரின் துணையுடன் சொந்தமாக 10 கறவை மாடுகள் வளர்த்துப் பராமரித்து வருகிறார். அதில் காலை, மாலை என இரு வேளை, 80 லிட்டர் பாலை தானே கறவை செய்து, தினசரி நேரம் தவறாமல், தனி ஆளாக இரு சக்கர வாகனத்தின் மூலம் சென்று விற்பனை செய்து வருகிறார்.

தனியாருக்கும், டீக்கடை வைத்திருப்போருக்கும் பால் விற்பனை செய்வதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் சுத்தமான, கலப்படமற்ற, தாய்ப்பாலுக்கு நிகரான பால் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தானே சென்று விற்பனை செய்து வருகிறார். நேரம், காலம், மழை, வெயில், பனிக்காலம் என்று பாராமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக, பால் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். குழந்தைகளுக்காக மட்டுமே பால் வழங்க வேண்டும் என்ற இலட்சியத்தோடும், ஈடுபாட்டுடன் சோர்வின்றி, மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வரும் அவர் ஒரு பெண்ணாலும் ஆணுக்கு நிகராக இத்தொழிலைச் செய்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version