பாகிஸ்தானில் பால், இறைச்சி ஆகிய பொருட்களின் விலை உயர்வு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இறைச்சி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரமும் அந்நாட்டின் பண மதிப்பும் கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 123 ரூபாயில் இருந்து 158 ரூபாய் என்கிற அளவுக்குக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் உணவுப் பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு ஒரு லிட்டர் பால் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

Exit mobile version