கும்பகோணம் அருகே ஆலயத்தில் உள்ள சுயம்புவிற்கு பசுமாடு தானாக வந்த பால் சுரந்து அபிஷேகம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் புறவழிசாலையில் உள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் மேற்கத்தி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம், கோவிலில் இருந்த பசுமாடு, தானாக கருவரை சென்று அங்கிருந்த சுயம்பு லிங்கத்திற்கு, மடியிலிருந்து பால் சொரிந்து அபிஷேகம் செய்தது. சுயம்பு லிங்கத்திற்கு மாடு பால் சொரிவது போன்ற கதைகளை, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கேள்விப்பட்ட நிலையில், நிகழ்காலத்தில் நடந்த இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் அதிசயமான நிகழ்வாக கருதி பூரிப்படைந்துள்ளனர்.
Discussion about this post