அமெரிக்கா – தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி இன்று தொடக்கம்

தங்கள் நாட்டு ராணுவ படையை பலப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய கப்பற்படை வீரர்கள் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகள் இன்று முதல் தென்கொரிய துறைமுகத்தில் நடைபெறுகிறது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான ராணுவ பயிற்சி கடந்த மே மாதம் முதல் நடைபெற இருந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரிய அரசுகள் சமாதான நிலைப்பாடு குறித்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் ராணுவ பயிற்சி வரும் நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது.

அதனால் இன்று முதல் இருநாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த 500 கப்பற்படை வீரர்கள் தென்கொரிய துறைமுகமான போகங்கில் பயிற்சி பெறுகின்றனர்.

மொத்தம் 24 சுற்று பயிற்சிகள் என்றும் இவை வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது என்றும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. இருநாட்டு பாதுகாப்பு குறித்து முக்கிய பயிற்சிகள் வரும் டிசம்பர் முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version