ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு போட்டி கண்காட்சி

ரஷ்யாவில் நடைபெற்று ராணுவ விளையாட்டு போட்டி கண்காட்சியை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.

ரஷ்யாவில் உள்ள அலாபினோ நகரில் ராணுவ விளையாட்டுப் போட்டி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகளை கொண்டு ஓவியம் வரைதல், பழங்களை நறுக்குவது உள்ளிட்ட வினோதமான விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து நடந்த ராணுவ பீரங்கிகளின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில், பெண்கள் ராணுவப்படையும் கலந்து கொண்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 39 நாடுகளை சேர்ந்த 223 ராணுவ அணிகள் கலந்து கொள்கின்றன. இதில், இந்தியா, சீனா, கஜகஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ராணுவ அணிகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version