மக்களவை தேர்தல் 2019 : எல்லைப் படை வீரர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலை முன்னிட்டு அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தோ திபெத் எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை இந்த தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக வரும் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, இன்று எல்லை காவல் படையினரின் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் இந்தோ திபெத் எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மக்களவை தேர்தலின் முதல் வாக்குகளை பதிவு செய்தனர்.

Exit mobile version