அமெரிக்காவில் தற்காலிகமாக மூடப்பட்ட புலம் பெயர்ந்தவர்களுக்கான முகாம் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் டோர்னிலோவில் புலம்பெயர்ந்த குழந்தைகளை தங்க வைப்பதற்கான முகாம் செயல்பட்டு வந்தது. இதற்க்கு அந்நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ட்ரம்ப் தனது முடிவை தளர்த்திக் கொண்டார். பின்னர் முகாம் மூடப்பட்டது. இந்நிலையில், சுமார் 2 ஆயிரத்து 500 புலம் பெயர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளது. வரும் வாரங்களில் இருந்து செயல்பட தொடங்கும் இந்த முகாமில் கடுமையான சோதனைக்குப் பிறகே புலம் பெயர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாவும், முகாமில் தங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.