மும்பை ரயில் நிலையம் முன்பு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கூட்டம் கூட்டமாக திரண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் பரபரப்பு நிலவியது.
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு, சொந்த மாநிலம் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றதால் பரபரப்பு நிலவியது. பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் ரயில்களில் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால், வரிசையில் நிற்கும் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யப்படாதவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.