ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகரில் இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், எல்லையிலுள்ள இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், எல்லையில் தீவிரவாத ஊடுருவலை பாகிஸ்தான் ஆதாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில், ஸ்ரீநகரின் பரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த மக்களை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.