மத்திய அரசின் பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வரும் 21 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மஹாராஷ்டிராவில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜல்கான் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மஹாராஷ்டிராவில், பட்னாவிஸ் தலைமையில் வலிமையான அரசு அமைய உங்களின் ஆதரவை கேட்டு வந்துள்ளேன் என்றும், கடந்த மக்களவை தேர்தலில், பாஜக மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு தெரிவித்ததற்கும் நன்றி தெரிவிக்கவும் வந்துள்ளேன் என்று கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காகத் தான், சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது என்றும், ஆனால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் மோடி விமர்சித்தார்.