மத்திய இடைக்கால பட்ஜெட் : பணியாளர் ஈஎஸ்ஐ வரம்பு அதிகரிப்பு

மக்களவையில் 2019-20 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வாசித்தார்.

சிறிய விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் மூலம் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு -மீன்வளத்துறையை மேம்படுத்த தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு – 22வது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்படும்.

கிஷான் யோஜனா திட்டத்தின்கீழ் சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ.75,000 கோடி ஒதுக்கீடு – 12 கோடி விவசாயிகள் பலன்பெறுவார்கள்.

கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு -கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

பணியாளர்களின் ஈஎஸ்ஐ வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக அதிகரிப்பு.

Exit mobile version