நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்களின் தாக்கம் குறித்து மதிப்பீடு

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைப் பகுதி, கழிமுகங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் பொருட்களின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்ய, 81 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டின் போது, நுண் பிளாஸ்டிக் பொருட்களின் நிலை குறித்து மூன்றாண்டுகளுக்கு மதிப்பீடு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 81 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும், நடப்பாண்டில் 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் ஆய்வை மேற்கொள்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தேர்வுசெய்யப்பட்ட கடற்கரைப்பகுதி, கழிமுகங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களின் நிலைகுறித்து அறிவதன் மூலம், அப்பகுதிகளை மறுசீரமைப்பு செய்து, மேலாண்மை செய்வதற்கு வாய்ப்பாக இத்திட்டம் அமையும்.

 

Exit mobile version