தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். இந்தக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களை பற்றி உரை ஆற்றினார்.
இதேபோல கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியபோது, விடியா திமுக அரசில் காவல் கொடுக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக அரசானது ஆட்சியைப் பிடித்தது என்று விமர்சனம் செய்தார். அதேபோல தென்காசி மாவட்டம் திருவேங்கடத்திலி நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சும் சிறப்புரை ஆற்றினார். மேலும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுஅ முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.