தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை மருத்துவ கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.