எம்.ஜி.ஆர் நினைவுநாள்: மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர்-அம்மா திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

மதுரையில் உள்ள எம்ஜிஆர்- அம்மா திருக்கோயிலில், எம்ஜிஆரின் 32வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

1987-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு, மதுரை மாவட்டம் அனுப்பானடியில் எம்ஜிஆரின் தீவிரத் தொண்டர்களால் எம்ஜிஆர் கோயில் கட்டப்பட்டது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின் அவரது சிலையையும் கோயிலில் நிறுவியுள்ளனர்.  ஆண்டு தோறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இக்கோயில் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து இக்கோயிலின் பூசாரியாக உள்ள நாகராஜ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அதிகாலை பொங்கல் வைத்து, இருவரின் திருவுருவ சிலைக்கு படைத்து அபிஷேகம் நடைபெறுவதாக  தெரிவித்தார். மேலும், மாலை வேளைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடித்த திரைப்படங்கள் கோயிலில் திரையிடப்படும் எனவும் கூறினார்.

Exit mobile version