சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி. ஆர் பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், பயணச் சீட்டுகளிலும் எம்.ஜி.ஆர் பெயர் அச்சிட்டு வழங்கப்படுகிறது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த ஆணை வெளியிடப்பட்ட மறுநாளே பயணச் சீட்டுகளிலும் எம்.ஜி.ஆர் பெயர் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.