மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை எட்டியது

தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 106 அடியை எட்டியுள்ளதால், விவசாயத்திற்கு பயனுள்ளதாயிருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 75 ஆயிரத்து 332 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வரலற்றில் 65-வது முறையாக நேற்று அதிகாலை 100 அடியை எட்டிய மேட்டூர் அணை பின்னர் படிப்படியாக உயர்ந்து, நேற்று இரவு நிலவரப்படி 106.70 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தற்போது ஒன்றரை லட்சமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக மேட்டூர் அணைனையில் இருந்து நீர் திறந்து வைத்தார்.

காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்னும் அமலில் உள்ளது.

Exit mobile version