தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், வழக்கமாக நீர் திறக்கப்படும் ஜூன் 12ஆம் தேதி, டெல்டா பாசனத்திற்கு அணையை திறக்க இயலவில்லை. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த 6-ம் தேதி வினாடிக்கு 259 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து தற்போது 930 கன அடியாக அதிகரித்துள்ளது.

பருவ மழை மேலும் தீவிரமடையும் நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.59 அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.14 டி.எம்.சி .,ஆக உள்ளது.

Exit mobile version